நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் மரணம்.!
நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் மரணம்.!
தமிழகத்தில் ஒன்பது நாட்கள் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுவது போல வடமாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக குஜராத், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நவராத்திரி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, துர்கா பூஜையின் போது ஒவ்வொரு பகுதிகளிலும் அம்மன் சிலை வைக்கப்பட்டு மாலை நேரங்களில் தீபம் ஏற்றி பாரம்பரிய நடனமான கர்பா சிறப்பு நடனம் ஆடுவது அவர்களுடைய வழக்கம். கர்பா நடனத்தை தங்களது பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடிய விடிய இசை கருவிகளுடன் நடனமாடுகின்றனர்.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதில் மாரடைப்பால் உயிரிழந்த பத்து பேரும் இளம் வயதினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்ப்ப நடனமாடிய 609 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.