அரசு மருத்துவமனையில்.. எலி கடித்து இறந்த சிறுவன்.? என்ன நடந்தது.. விசாரணையில் மருத்துவ குழு.!
அரசு மருத்துவமனையில்.. எலி கடித்து இறந்த சிறுவன்.? என்ன நடந்தது.. விசாரணையில் மருத்துவ குழு.!
வீல் என்று கத்திய சிறுவன்
கடந்த டிசம்பர் 11ஆம் தேதி 10 வயது சிறுவன் ஒருவன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிறுவன் திடீரென கதறி கதறி அழ ஆரம்பித்துள்ளான். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடிச் சென்று பார்த்துள்ளனர்.
எலி கடித்து உதிரப் போக்கு
சிறுவனின் கால்களில் எலி கடித்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து பதறிப்போன அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுவன் அந்த சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார்.
இதையும் படிங்க: மகளின் அந்தரங்க உறுப்பை, சிதைத்த தந்தை.! படு கேவலமான காரணம்.!
நிமோனியா காய்ச்சல்?
இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியபோது சிறுவனுக்கு நிமோனியா காய்ச்சல் அதிகமாக இருந்ததால்தான் அவன் உயிர் இழந்தான் என்றும், மற்றபடி எலி கடித்ததால் அவன் இறக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இது பற்றி தீவிரமாக விசாரிக்க மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
நம்பாத பெற்றோர்கள்?!
ஆனால் எலி கடித்து ரத்தப்போக்கு ஏற்பட்டு தான் தங்கள் மகன் இறந்தான் என்று சிறுவனின் பெற்றோர் தெரிவித்து வருகின்றனர். மருத்துவ குழுவின் விசாரணைக்கு பின்னர் முழு உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகளின் அந்தரங்க உறுப்பை, சிதைத்த தந்தை.! படு கேவலமான காரணம்.!