ஆன்லைன் வகுப்பு கவனிக்கமுடியலையே! 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
10th standard student commit suicide
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அசுரவேகத்தில் பரவி கோரதாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில தளர்வுகளுடன் ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலால் பள்ளிகளை திறப்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் கேரளாவை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த திங்கள்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, வீட்டில் தொலைக்காட்சி பழுதடைந்து விட்டதால், செல்போனில் ஆன்லைன் மூலம் பாடத்தை கவனிக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லை. இந்நிலையில் ஆன்லைனில் பாடத்தை கவனிக்க முடியவில்லையே என மனமுடைந்த அவர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் அப்பா கூலித் தொழில் செய்து வந்துள்ளார்கள் வருமானம் எதுவும் இல்லாத நிலையில் அவர் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.