மின்கம்பம் மீது மோதிய டிராக்டர்! விவசாயிகள் 11 பேர் பரிதாப பலி!
11 farmers died in accident
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மாச்சவரம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஓங்கோலில் உள்ள மிளகாய் மண்டியில் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று மாலை வேலை முடிந்து 30 தொழிலாளர்கள் டிராக்டரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ராப்ர்லா அருகே டிராக்டர் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வண்டி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதால் மின்கம்பம் முறிந்து டிராக்டர் மீது விழுந்தது.
மின்கம்பத்தின் மின்கம்பிகள் டிராக்டரில் இருந்தவர்களின் மீதுபட்டதில் மின்சாரம் தாக்கி 7 பெண்கள், 12 ஆம் வகுப்பு) மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஓங்கோல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேர் உயிரிழந்தனர்.
டிராக்டரில் இருந்தவர்களில் சிலர் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக, ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.