பல நூறு அடி உயரத்தில் ரோப் காரில் சிக்கிய 11 சுற்றுலா பயணிகள்.! 3 மணி நேரமாக மீட்பு போராட்டம்.!
பல நூறு அடி உயரத்தில் ரோப் காரில் சிக்கிய 11 சுற்றுலா பயணிகள்.! 3 மணி நேரமாக மீட்பு போராட்டம்.!
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று பர்வானூ. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக ரோப் கார் சேவை செயல்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் இந்த ரோப் காரில் 11 சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ளனர். அப்போது ரோப் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவழியில் 2 மணிநேரம் நின்றது.
ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய பயணிகளை வெளியேற்றுவதற்காக கேபிளில் ஒரு மீட்பு தள்ளுவண்டி பயன்படுத்தப்பட்டது. அவர்கள் கீழே உள்ள பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது கயிறு கட்டி கேபிள் காரில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி கொண்டு வரப்பட்டனர்.
தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சுற்றுலாவாசிகள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மேலாண் முதன்மை செயலாளர் ஓன்கார் சந்த் சர்மா உறுதிப்படுத்தி உள்ளார்.