ஒரே நாளில் 1,26,728 பேருக்கு அரசு பணி! இந்தியாவிலையே இதுதான் முதல் முறை! குவியும் வாழ்த்துக்கள்.
126728 people got government job in one day at Andhra
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றத்தில் இருந்து பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செய்துவருகிறார். சமீபத்தில் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் அல்லது தனியார் மருத்துவமனையில் பணியாற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்து மக்களின் ஆதரவை பெற்றார்.
இந்நிலையில் அரசு துறையில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் அவர் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11,158 கிராம செயலகமும், 110 நகராட்சிகளில் 3809 வார்டு செயலகம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி இதில் பணி புரிவதற்காக 22,69,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவர்க்கும் ஒரே நாளில் தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து அதன் மூலம் ஒரே நாளில் சுமார் 1,26,728 தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து விஜயவாடாவில் நடந்த மாபெரும் நிகழ்ச்சியில் முதலவர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில் 1,26, 728 பேருக்கு ஒரே நாளில் அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.