13 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட 55 வயது பில்டிங் காண்ட்ராக்டர்.. கடைசியில் நிகழ்ந்த சோகம்.!
13 vayathu sirumi mithu aasaipatta 55 vayathu muthavar, kadachil nikalntha sogam
டெல்லியின் நரோலா என்ற பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பில்டிங் காண்ட்ராக்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நரோலா பகுதியில் ஒரு வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அங்கு அர்ஜுன் சிங்கிடம் பலர் பணிபுரிந்து வரும் நிலையில், 13 வயது சிறுமி ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த சிறுமி அங்கு வேலை செய்யும் மேஸ்திரியின் மகள் அவர். இந்நிலையில் அந்த சிறுமியின் மீது தனக்கு விருப்பம் இருப்பதாகவும், திருமணம் செய்ய ஆசையாக உள்ளதாகவும் அர்ஜுன் சிங் அந்த சிறுமியின் பெற்றோரிடம் பேசியுள்ளார்.
அதற்கு அந்த சிறுமியின் பெற்றோர் அர்ஜுன் சிங்கை கடுமையாக திட்டி சென்றுள்ளனர். அதன்பிறகும் ஓயாமல் அர்ஜுன் சிங் அந்த சிறுமியின் உறவினர் ஒருவரிடம் இது குறித்து பேசியுள்ளார். எல்லாம் சரியாக நடந்தால் அந்த சிறுமியின் குடும்பத்திற்கும், உங்களுக்கும் பண உதவிகள் செய்வதாகவும் பேசியுள்ளார்.
அப்போது அந்த சிறுமியின் உறவினர், உங்கள் வயது என்ன? சிறுமியின் வயது என்ன? என கூறி அர்ஜுன் சிங்கை அசிங்கப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அர்ஜுன் சிங், அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சிறுமியின் உறவினரை தாக்கியுள்ளார்.அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.