நெஞ்சை உலுக்கும் கொடூரம்... 14 வயது பட்டியலின சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு... கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு.!
நெஞ்சை உலுக்கும் கொடூரம்... 14 வயது பட்டியலின சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு... கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு.!
ஆந்திராவில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 14 வயது சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.
ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பட்டியலினச் சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் லோகேஷ் என்பவர் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். மேலும் சிறுமியை தனியாக சந்திக்க வேண்டும் எனக் கூறி லாட்ஜுக்கு அழைத்து சென்ற அவர் தனது உறவினரான நரேந்திரன் என்பவருடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார் .