அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 16- பேர் பலி.! கடும் வருத்தத்தில் பிரதமர் மோடி.!
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் இருந்து நேற்று நள்ளிரவு கிங்கவுன் என்ற கிராமம் அருகே
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் இருந்து நேற்று நள்ளிரவு கிங்கவுன் என்ற கிராமம் அருகே டிரக் ஒன்று வந்து கொண்டிருந்தபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கு நடந்த விபத்தில் தொழிலாளர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அங்கு நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலை விபத்தில் 16- பேர் பலியான நிகழ்வுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் அவரது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.