பாலியல் வன்கொடுமை செய்த நபரால் 16 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்...
பாலியல் வன்கொடுமை செய்த நபரால் 16 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்...
உத்தரபிரதேச மாநிலம் முசார்பர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த தாலிப் என்ற இளைஞர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து தாலிப் நேராக சிறுமியிடம் சென்று தன் மீது நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய புகாரின் பேரின் தாலிப் மீது தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.