வலுக்கட்டாயமாக வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள்... 18 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... போலீசார் விசாரணை!!
வலுக்கட்டாயமாக வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள்... 18 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... போலீசார் விசாரணை!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியிருந்து 18 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய போலீசார் அந்த பெண்ணின் அறையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தற்கொலைக்கு முன்பாக அப்பெண் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் நண்பர்களின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதி அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதனை வைத்து போலீசார் கடிதத்தில் இருந்த எட்டு நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த பெண்ணை நண்பர்கள் எட்டு பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை வீடியோ எடுத்துள்ளனர்.
வீடியோ எடுத்ததால் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் . இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.