4 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை! மீட்பு படையினரின் செயலால் குவிந்துவரும் பாராட்டுகள்!
2 years old boy stuck in borewell
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ருர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சுக்விந்தர் என்பவரின் மகன் ஃபட்டேவிர் சிங் என்ற இரண்டு வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை மதியம் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான் . உடனே அவனது தாய் சிறுவனை மீட்க முயற்சி செய்தார். மீட்க முடியாததால் மீட்புக்குழுவை வரவழைத்துள்ளனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் குழந்தை இன்னும் மீட்கப்படாமல் உள்ளது. கடைசியாக கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் குழந்தையின் அசைவு தென்பட்டுள்ளது. அதன் பின்னர் எந்த வித அசைவும் இன்றி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் குழந்தைக்கு உணவோ, குடிநீரோ வழங்கப்பட முடியாத நிலையில், ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாக மீட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். குழந்தையின் நிலை குறித்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்ததால் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் இருந்தனர்.
இதனையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே 36 அங்குல சுற்றளவில் பள்ளம் தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் போராட்டத்துக்கு பின் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டான். உடனடியாக அவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை உயிருடன் மீட்ட மீட்ப்பு படையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.