வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி! ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!
20 year medical student girl commits suicide in kerala
கேரளா கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா என்ற 20 வயதுமிக்க இளம்பெண் ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கேரளா கோட்டயம் பகுதிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண்ணும் 14 நாட்கள் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்பொழுதும் குடும்பத்தினர்கள் அவரிடம் போன் செய்து பேசி வந்துள்ளனர். இவ்வாறு சமீபத்தில் கிருஷ்ணபிரியாவின் பெற்றோர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அவரது உறவினரை தொடர்புக்கொண்டு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். அங்கு கதவை தட்டியபோது நீண்ட நேரமாகியும் கிருஷ்ணபிரியா கதவை திறக்காததால், ஜன்னலை உடைத்து பார்த்துள்ளனர் அங்கு கிருஷ்ணபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கிருஷ்ணபிரியாவிற்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் இன்னும் வரவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த போலிசார், அந்த இளம்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவரது செல்போன், லேப்டாப் போன்றவற்றை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணபிரியா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.