அதிர்ச்சி..! 200 ரூபாய் நோட்டு வச்சுருக்கீங்களா..? அப்போ கொஞ்சம் உஷாரா இருங்க..! 151 சதவீதம் அதிகரித்த 200 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை.!
200 Rupees fake note count increased 151 percentage in India
200 ரூபாய் கள்ளநோட்டுகளின் புழக்கம் 151 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பன மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து 2000, 200 ரூபாய் போன்ற புது ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புது 500 ரூபாய் நோட்டுகளும் அதிகம் புழக்கத்திற்கு வந்தது. கள்ளநோட்டுகளை கட்டுப்படுத்தவே இந்த புது நோட்டுகளை அறிமுகம் செய்ததாகவும் அரசு விளக்கமளித்திருந்தது.
ஆனாலும் புது ரூபாய் நோட்டுகளிலும் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2019 - 2020 ஆம் நிதியாண்டில் மட்டும் 500 ரூபாய் மதிப்புக்கொண்ட சுமார் 30054 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2018 - 2019 ஆம் நிதியாண்டைவிட இது 37 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. அதேநேரம் 200 ரூபாய் மதிப்பு கொண்ட 31969 கள்ளநோட்டுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டைவிட தற்போது 200 ரூபாய் கள்ளநோட்டின் எண்ணிக்கை 151 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 200 ரூபாய் நோட்டுகளை கொடுக்கும்போது, வாங்கும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது.