மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்த பச்சிளம் குழந்தை... பெற்றோரின் முட்டாள் தனத்தால் நிகழ்ந்த விபரீதம்.!
3 year old child not eat food for last three days
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரவீன் - ஷியாமாலா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் பூர்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அந்த மூன்று வயது பச்சிளம் குழந்தை பூர்விகா மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த பூர்விகாவின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அருகில் இருந்த சவுடம்மன் கோவில் பூசாரியான ராகேஷ்(19) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ராகேஷ் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது என்று கூறி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யுமாறு குழந்தையின் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது குழந்தைக்கு பேய் ஓட்டுவதாக கூறி குழந்தையை பிரம்பால் சராமரியாக தாக்கியுள்ளார் ராகேஷ்.
அதில் குழந்தை பூர்விகா மயக்கம் போட்டு விழுந்துள்ளது. குழந்தையை பெற்றோரிடம் கொடுத்து விட்டு ராகேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்று வெகு நேரம் ஆகியும் குழந்தை கண் திறக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.