தாத்தா இறந்ததுகூட தெரியாமல் அவர் சடலத்தின் மீது ஏறி அமர்ந்திருந்த 3 வயது சிறுவன்..! கண்கலங்க வைக்கும் புகைப்படம்.!
3 years boy sitting on grand father dead body in kashmir attack
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட தனது தாத்தாவின் உடலின் மீது சிறுவன் ஏறி அமர்ந்திருந்த புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 60 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தனது பேரனுடன் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த அவர் மீது, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டு துளைத்ததில் அந்த முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
என்ன நடக்கிறது என எதையும் அறியாத அந்த சிறுவன் தாத்தாவின் சடலத்தின் அருகே நின்றுள்ளான். இதனை பார்த்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அந்த சிறுவனை அங்கிருந்து நகர்ந்துசெல்லுமாறு கூறுகிறார், உடனே அந்த சிறுவன் இறந்துபோன தனது தாத்தாவின் சடலத்தின்மீது ஏறி அமர்ந்துள்ளான்.
பின்னர் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் அந்த சிறுவனை அங்கிருந்து மீட்டு சென்றுள்ளார். இந்த காட்சிகள் சிலரால் புகைப்படமாக எடுக்கப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.