கொரோனா விஷயத்தில் உலகத்தையே ஆச்சரியப்படுத்திய 3 வயது இந்திய சிறுமி.! வியந்துபோன மருத்துவர்.!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் ஸன்ஹிபோடோ மாவட்டம் காதாஷி பகுதியை ச
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் ஸன்ஹிபோடோ மாவட்டம் காதாஷி பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுமி லிபவி என்பவருக்கு லேசான சளி அறிகுறி இருந்துள்ளது. கூலித் தொழில் செய்துவரும் சிறுமியின் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் சிறுமி லிபவி தனக்கு லேசான சளி, காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டநிலையில் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு தனியாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் சிறுமி லிபவி முகக்கவசம் அணிந்து கொண்டு தனியாக வருவதை பார்த்து ஆச்சரியமடைந்த மருத்துவர் சிறுமியிடம் விசாரித்துள்ளார். மருத்துவரிடம் சிறுமி தனக்கு லேசான சளி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது. எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா எனப் பரிசோதித்து பாருங்கள் என கூறியுள்ளார். இதனால் மருத்துவர் மேலும் ஆச்சரியமடைந்து சிறுமியை பரிசோதனை செய்துள்ளனர்.
வளர்ந்த இளைஞர்களும், படித்தவர்களும் கூட கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் தயக்கம் காட்டி வரும் நிலையில் சிறுமியின் செயல் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. இது குறித்து அம்மாநிலத்தின் பாஜக தலைவர் பெஞ்சமின் யெப்தோமி அவரது ட்விட்டர் பக்கத்தில் “ 3 வயது சிறுமியின் இந்த செயல் மருத்துவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் பெரியவர்களே தங்களை பரிசோதித்துக்கொள்ளவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் தயக்கம் காட்டி வரும் நிலையில், லிபாவியின் அப்பாவித்தனம் பிறருக்கு முன்னுதராணமாக அமைந்துள்ளது. அவரை கடவுள் ஆசிர்வதிக்கப்பட்டு சிறுமி நலமாக இருக்கிறாள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.