வீடியோ எடுத்து மிரட்டி சிறுமியை சீரழித்த 2 இளைஞர்கள்!
வீடியோ எடுத்து மிரட்டி சிறுமியை சீரழித்த 2 இளைஞர்கள்!
கர்நாடகா மாநிலம் துமகூர் மாவட்டத்தில் உள்ள சித்தங்க மரத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4ம் தேதி நடைபெற்றுள்ளது.
இந்த திருவிழாவில் 18 வயது குட்பட்ட சிறுமி ஒருவர் தனது நண்பருடன் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அங்கு அருகே உள்ள மலை உச்சிக்கு தனது நண்பருடன் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த அங்கிருந்த 3 பேர் அவர்கள் இருவரும் பேசியதை தூரமாக நின்று வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் மூவரும் அந்த பெண்ணிடம் சென்று வீடியோவை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுமி செய்வதறியாது அச்சுமடைந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர்கள் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு சிறுமியை மூன்று இளைஞர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சமூகம் குறித்து அந்த சிறுமையை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.