அப்பா வீட்டில் இல்லாதபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த காரியம்! திருமணமாகாத 31வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
31 year girl killed by gunshoot at punjab
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங். இவரது மகள் ப்ரீத் கவுர். 31 வயது நிறைந்த இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜஸ்பிர் சிங் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், ப்ரீத் கவுர் தனது 17 வயது நிறைந்த தம்பி ஜர்னல் மற்றும் லூதியானாவை சேர்ந்த உறவினர் சிலருடன் வீட்டில் இருந்துள்ளார்.
அப்பொழுது அவர் படுக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டிருந்த நிலையில், அங்கு மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் வாசலில் இருந்தபடியே, வீட்டிற்குள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ப்ரீத் கவுர் மீது குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த நபர்கள் அங்கிருந்து பைக்கிலேயே தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ப்ரீத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.