அடியோடு சரிந்து விழும் நான்கு மாடி கட்டிடம் - பரபரப்பு வீடியோ காட்சி!
4 stroyed building colapsed video
பெங்களூரின் காந்தி நகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
காந்தி நகர் பகுதியில் இருந்த அந்த நான்கு மாடி கட்டிடம் மிகவும் பழமையானது. தற்போது இந்த கட்டிடத்தின் அருகில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பழைய கட்டிடத்தின் அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அந்த கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த கட்டிடத்தில் மக்கள் யாரும் இல்லாததால் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
நான்கு மாடி கட்டிடம் சரிந்து விழும் காட்சியானது செல்போனில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.