இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி.!
இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி.!
கேரளாவில் இசை நிகழ்ச்சி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரம் கணக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரசிகர்கள் கேட்ட பாட்டையே கேட்பதற்கு ஆர்வமாக செல்கின்றனர்.
இது போன்ற இசை நிகழ்ச்சிகளில் அதிக கூட்ட நெரிசல்கள் இருப்பதால், ரசிகர்கள் சரியாக ரசிக்க கூட முடியாது. சமீபத்தில் கூட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.