வனப்பகுதியிலிருந்து வீசிய பயங்கர துர்நாற்றம்... விரைந்து சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
வனப்பகுதியிலிருந்து வீசிய பயங்கர துர்நாற்றம்... விரைந்து சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து பயங்கரமான துர்நாற்றம் வந்துள்ளது. அதனையடுத்து அப்பகுதி மக்கள் வனப்பகுதியில் சென்று பார்த்த போது குவியலாக குரங்குகள் கொல்லப்பட்டு இறந்து கிடந்துள்ளன.
அதனையடுத்து அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த குரங்குகளின் உடல்களைக் கைப்பற்றி பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் குரங்கு மற்றும் அதன் குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் உடல்கள் இறந்து கிடப்பதாகவும் ஆனால் சிலகம் கிராமத்தில் குரங்குகளே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வேறு இடத்தில் யாரோ விஷம் வைத்து குரங்குகளை கொலை செய்து விட்டு இங்கு வந்து வீசி சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் குறியுள்ளனர்.
இது குறித்த விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீகாகுளம் வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணன், தெரிவித்தார். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.