டிரம்புக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 5 குரங்குகள்...! எதற்காக தெரியுமா..?
5 Langur monkey using in trump india visit
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளுடன் வந்துள்ள ட்ரம்ப் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை இன்று சுற்றி பார்க்கவுள்ளார். இதையொட்டி ஆக்ராவில் தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் 5 நீண்டவால் கொண்ட லாங்கூர் இன குரங்குகளும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகம் இருக்கும் என்பதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையின்போது குரங்குகளால் பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்புள்ளது.
எனவே, அதிபரின் வருகையின் போது குரங்குகள் குறுக்கிட்டால் அந்த குரங்குகளை பயமுறுத்தவும், விரட்டியடிக்கவும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 5 லாங்கூர் இன குரங்குகள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.