சுஜித்தை தொடர்ந்து மீண்டும் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி.! தீவிரமாகும் மீட்பு பணி!!
5 year girl fall into 50 feetborewell
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த சுஜித் என்ற 2வயது குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை 25ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்பதற்கான தீவிரமாக பணிகள் நடைபெற்ற நிலையில் குழந்தை உயிரிழந்திருந்து சடலமாக நிலையில் 29 ம் தேதி அதிகாலை, ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணற்றை மூடகோரி பல அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஹரியான மாநிலத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் சிவானி என்ற 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த நிலையில் ஆழ்துளை கிணற்றுள் 50 அடியில் விழுந்துள்ளது.சிறுமி ஆழ்துளை கிணற்றுள் விழுந்த விவகாரம் பெற்றோருக்கு இரவு 9 மணிக்கு தெரியவந்த நிலையில் தேசியபேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கிடையில் கிராமமக்கள் ஆழ்துளை கிணத்தின் அருகே பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுமிக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. a சிறுமி மீட்கபட்டதும் அவருக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவ குழு தயாராக உள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.