ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க 18 மணி நேர போராட்டம்! இறுதியில் நடந்த சோகம்!
5 years baby died in borewell
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற 2வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள கரவுண்டாவில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தில், 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழ்துளையின் பக்கவாட்டில் குழி தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குழந்தை தலைகீழாக விழுந்திருந்தால் ஆரம்ப கட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து, சிறுமியை வெளியே இழுக்க வேறு வழிமுறைகளை முயற்சித்தனர். இறுதியில் பக்கவாட்டில் குழி தோண்டி இன்று ஷிவானி வெளியே எடுக்கப்பட்டார். ஆனால் குழந்தை உடல் அசைவு எதுவுமின்றி இருந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தால் சிறுமியின் கிராமமக்கள் சோகத்தில் உள்ளனர். தமிழகத்தில் திருச்சி சுர்ஜித் சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த நிலையில், மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.