என்ன கொடுமை சரவணா... மனைவி இறந்த சோகத்தால் 23 வயது இளம்பெண்ணை மணந்த 60 வயது நபர்...
என்ன கொடுமை சரவணா... மனைவி இறந்த சோகத்தால் 23 வயது இளம்பெண்ணை மணந்த 60 வயது நபர்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹூசைனாபாத் பகுதியை சேர்ந்தவர் நக்கத் யாதவ்(60). இவருக்கு திருமணமாகி 6 பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவரையும் திருமணம் செய்து செட்டிலாக்கி விட்டு தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நக்கத் யாதவ் மனைவி இறந்துள்ளார்.
இதனால் சில காலம் தனிமையில் வசித்து வந்துள்ளார் நக்கப் யாதவ். அப்போது அவரின் மனதில் சிறிய பயம் தோன்றியுள்ளது. அதாவது தனிமையில் இருந்தால் விரைவில் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்த யாதவ் இரண்டாவதாக திருமணம் செய்ய எண்ணியுள்ளார்.
அதனை குறித்து தனது 6 மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோவிலில் நந்தினி என்ற 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார் யாதவ். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இது குறித்து யாதவ் கூறுகையில் நான் நந்தினியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யவில்லை அவர் மற்றும் இருவீட்டரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளேன். என் மகள்களும் இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.