காலையில் படிப்பு மாலையில் Zomato டெலிவரி.. தந்தை விபத்தில் சிக்கியதால் 7 வயது சிறுவனின் பரிதாப நிலை..!
காலையில் படிப்பு மாலையில் Zomato டெலிவரி.. தந்தை விபத்தில் சிக்கியதால் 7 வயது சிறுவனின் பரிதாப நிலை..!
கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லியைச் சேர்ந்த ராகுல் மிட்டல் என்பவர் Zomato-வில் உணவு பொருள் ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்ய வந்தவர் ஏழு வயதே ஆன பள்ளி மாணவர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராகுல் அந்த சிறுவன் குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
Zomato-வில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்த அந்த சிறுவனின் தந்தை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். தந்தையால் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் தந்தைக்கு வரும் டெலிவரி ஆர்டர்களை இந்த சிறுவன் சைக்கிளில் வீடு வீடாக சென்று டெலிவரி செய்து வந்துள்ளான்.
காலையில் பள்ளிக்கு செல்லும் அவன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த வேலையை செய்து வந்துள்ளான். சிறுவனின் இந்த கதையை கேட்ட ராகுல் மிட்டல் ஒரு வீடியோவினை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முடிந்தவர்கள் இந்த சிறுவனுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த வீடியோவிற்கு பல விமானங்கள் வந்துள்ளது. குழந்தை தொழிலாளர் சட்டத்தை மீறி Zomato நிறுவனம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தற்போது அந்த சிறுவனுடைய தந்தையின் டெலிவரி அக்கவுண்டை Zomato தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. மேலும் பண உதவியும் செய்துள்ள அந்நிறுவனம் சிறுவனின் தந்தை உடல்நலம் தேறியவுடன் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள உறுதி அளித்துள்ளது.