கொரோனா எவ்வளவோ பரவால்ல..! கொரோனாவை விட கொடிய பாதிப்பை ஏற்படுத்திய ஆம்பன் புயல்..! கண்ணீர் வரவைக்கும் பலி எண்ணிக்கை..!
72 people died for amphan strom
வங்கக்கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியானது தாழ்வு மண்டலமாக மாறி அதிதீவிரமடைந்து பெரும் புயலாக உருவெடுத்துள்ளது. ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேற்கு வங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே நேற்று முன்தினம் புதன்கிழமை
பிற்பகல் அல்லது மாலை கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையியல், ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்தது. இந்த புயல் 20 வருடங்களில் இல்லாத சேதத்தை உருவாக்கியது. புயல் கரையை கடந்த போது சுழன்றடித்த காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் கொல்கத்தாவிலும் மற்றும் சில மாவட்டங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் சாய்ந்ததால் செல்போன் மற்றும் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி புயலின் காரணமாக மாநிலத்தில் 72 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்துக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.