இளைஞரின் பொறுப்பற்ற செயலால், பச்சிளங்குழந்தையை தாக்கிய கொரோனோ! வெளியான அதிர்ச்சி தகவல்!
8 month baby affected in corono virus at kerala
திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த 21 வயது நிறைந்த இளைஞர் ஒருவர் கத்தாரில் இருந்து கொச்சிக்கு வந்துள்ளார். இவருக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது .
இதனை தொடர்ந்து கொச்சியில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்ற அவர் அரசு கூறிய எந்த அறிவுரைகளையும் கேட்காமல், பரிசோதனைகள் மேற்கொள்ளாமல், 20 நாட்கள் தனிமையில் இல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளார். மேலும் ஊருக்கு திரும்பிய அவர் மாலுக்கு செல்வது, சினிமாவுக்குச் செல்வது , ஊரில் நடந்த நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொள்வது என இருந்து வந்துள்ளார். மேலும் சமீபத்தில் தொண்டை வலியால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அவருடன் பயணித்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், இவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த இளைஞனின் அலட்சிய செயலால் அவரது உறவினரின் எட்டு மாத குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தொண்டைவலிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அந்த இளைஞருடன் தொடர்பில் உள்ள 355 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அந்த இளைஞரின் தந்தை, தாய், சகோதரி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பலரும் பொறுப்பற்று அலட்சியமாக செயல்படுவதால் கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.