எப்படிடா இப்படி எல்லாம் செய்ய மனசு வந்துச்சு... 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 14 வயது சிறுவன்!!
எப்படிடா இப்படி எல்லாம் செய்ய மனசு வந்துச்சு... 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 14 வயது சிறுவன்!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த வாரத்தில் காணாமல் போயுள்ளார். அதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காமல் போகவே போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் வீட்டிற்கு அருகே இருந்த காலி மனையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அங்கு இருந்த சிசிடிவி காட்சியை வைத்து சந்தேகத்திற்கு இடமான 14 வயது சிறுவனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது சிறுமியை கடத்தி சென்ற அந்த 14 வயது சிறுவன் ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுமி யாரிடமாவது கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஊர்க்காரர்கள் அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து சிறுவனை மீட்டு போலீசார் அவனை சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.