கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்த வயதான தம்பதியினர்! குணமடைந்தது எப்படி தெரியுமா?
93 y old men and 88 y old women required for corona
கேரளா மாநிலம் பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (93), மரியம்மாள் (88) தம்பதியினர். இவர்களின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான இத்தாலியிலிருந்து ஊர் திரும்பியுள்ளனர்.
அவர்களிடமிருந்து அந்த வயதான தம்பதியினருக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. அதனை அடுத்து இருவரையும் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதுவரை கொரோனா வைரஸால் பெரும்பாலான வயதானவர்கள் இறந்த நிலையில் இந்த முதிர்ந்த தம்பதியினர் மீண்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கூடிய விரைவில் இந்த தம்பதியினர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுள்ளனர்.
இதுகுறித்து வயதான தம்பதியினரின் பேரன் கூறியதாவது, அதாவது எனது தாத்தாவுக்கு பீடி, சிகரெட் மற்றும் புகையிலை போன்ற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இருவரும் நல்ல சத்தான உணவை தான் சாப்பிட்டு வந்தார்கள். அதுமட்டுமின்றி எனது தாத்தாவுக்கு உடற்பயிற்சி செய்யாமலேயே சிக்ஸ் போக் உடல் அமைப்பு காணப்படும் என்று கூறியுள்ளார்.