9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை.. போலீசார் தீவிர விசாரணை.!
9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை.. போலீசார் தீவிர விசாரணை.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சமூக நலத்துறை விடுதியில் தங்கி 14 வயதுடைய மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து மாணவியின் உடல்நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அதிர்ச்சி அடைந்து விடுவிக்கு வந்த மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சி தரும் தகவல் காத்திருந்தது.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறியதை கேட்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மாணவிக்கு இரண்டரை கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அச்சம் காரணமாக தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து மறைத்து விட்டதாக கூறியுள்ளார்.