ரீல்ஸ் மோகத்தால் துயரம்: இரயில் மோதி உயிரிழந்த 14 வயது சிறுவன்.. பதைபதைக்கும் வீடியோ உள்ளே.!
ரீல்ஸ் மோகத்தால் துயரம்: இரயில் மோதி உயிரிழந்த 14 வயது சிறுவன்.. பதைபதைக்கும் வீடியோ உள்ளே.!
ஸ்மார்ட்போன் உலகம் ஒவ்வொருவரையும் சுயமாக உழைக்க உதவும் நிலையில், ஆர்வக்கோளாறு கொண்ட சில நபர்களால் அவர்களின் உயிர் பறிபோவது ஸ்மார்ட்போனிலேயே பதிவாகிறது. பாவம் அதனை பார்க்கவும், ரசிக்கவும் அவர்களில் சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி பகுதியை சேர்ந்த சிறுவன் ஃபர்மான் (வயது 14). சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று அங்குள்ள இரயில் தண்டவாளத்திற்கு நண்பருடன் சென்ற இளைஞர், இரயில் வரும்போது தண்டவாளப்பகுதியில் அருகே நிற்பது போல ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சித்திருக்கிறார்.
அப்போது, அவ்வழியே இரயிலும் வர, சிறுவன் வீடியோ பதிவிட எண்ணி தண்டவாளத்திற்கு மிக அருகே சென்றுள்ளார். இதனால் இரயிலின் முன்பக்கம் அடிபட்டு, சில அடிதூரம் தூக்கி வீசப்பட்டு இருக்கிறார்.
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் சிறுவன் பரிதாபமாக பலியாகினான். இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து வந்த இரயில்வே காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, ரீல்ஸ் மோகத்தால் நடந்த சோகம் தெரியவந்தது.