150 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிசூலத்தால் வாலிபரின் கழுத்தில் ஓரே குத்து!. கொடூர நிகழ்வால் மருத்துவர்கள் அதிர்ச்சி..!!
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிசூலத்தால் வாலிபரின் கழுத்தில் ஓரே குத்து!. கொடூர நிகழ்வால் மருத்துவர்கள் அதிர்ச்சி..!..!!
மேற்குவங்கத்தில் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒருவரை கழுத்தில் திரிசூலத்தால் குத்திய பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டம் கல்யாணி பகுதியை வசித்து வரும் பாஸ்கர் ராம் (35) என்பவருக்கும், இன்னொருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் பாஸ்கர் ராமை அந்த நபர் திரிசூலத்தால் கழுத்தில் குத்தினார். பாஸ்கர் ராமின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டுவதை பார்த்த அவரது சகோதரி மயங்கி விழுந்தார்.
திரிசூலம் கழுத்தில் சிக்கியதால் அதை அகற்ற முடியாமல் பாஸ்கர் ராம் வலியில் துடித்தார். அங்கிருந்தவர்கள் பாஸ்கர் ராமை கொல்கத்தாவில் இருக்கும் என்ன என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பாஸ்கர் ராமின் கழுத்தில் திரிசூலம் குத்தி இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைதொடர்ந்து பாஸ்கர் ராம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பல வருடங்கள் பழமையான, சுமார் 30 செ.மீ நீளமுள்ள, திரிசூலத்தை மருத்துவர்கள் அகற்றினர்.
இதுபற்றி மருத்துவர் பிரணபாஷிஷ் பானர்ஜி கூறுகையில், பாஸ்கர் ராமன் கழுத்தில் குத்தப்பட்டிருந்த திரிசூலம் கிட்டதட்ட 150 ஆண்டுகள் பழமையானது பரம்பரை பரம்பரையாக வீட்டில் வைத்து பூஜை செய்த திரிசூலத்தால் பாஸ்கர் ராமை குத்தியுள்ளனர். இப்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து நாடியா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.