நடைபாதையில் குடிமகன்கள் அட்டகாசம்.. போலீசை அழைத்து வந்து மாஸ் காண்பித்த சிறுமி.!
நடைபாதையில் குடிமகன்கள் அட்டகாசம்.. போலீசை அழைத்து வந்து மாஸ் காண்பித்த சிறுமி.!
கலாச்சாரம், திரைமோகம் என இளைஞர்கள் பலவகைகளில் சீரழிந்து வருகின்றனர். இளம் வயதிலேயே உடலுக்கும், எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் கேடான புகைப்பழக்கம், மதுப்பழக்கம், கஞ்சா, ஹெராயின், ஆபாச பட தளங்களை பார்ப்பது போன்ற பழக்கங்களை கொண்டுள்ளனர். ஆணுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல, பெண்களின் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கேடான பாதைக்கு செல்கிறது.
இந்நிலையில், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையின் ஓரம் உள்ள மரத்தின் அடியில் 3 இளைஞர்கள் மதுபானம் அருந்தியவாறு சீட்டு கட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் மூவரும் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்யவும் செய்கின்றனர். மேலும், மதுபானம் அருந்திவிட்டு, காலி மதுபாட்டிலை எடுத்து வேண்டும் என்றே நடைபாதையில் வீசுகின்றனர்.
அவ்வழியாக பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்த சிறுமி நடைபாதையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து ஓரமாக போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். புறப்பட்டு சென்றவர் ரோந்து பணியில் ஈடுபடும் பெண் காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சிறிது நேரத்தில் பெண் காவலர்களுடன் சிறுமி வருகை தருகிறார்.
காவலர்களை பார்த்த குடிமகன்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சிக்கவே, காவலர்கள் மூவரையும் விரட்டி பிடித்தனர். சிறுமியின் செயல் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகிறது.