ஊரடங்கு சமயத்தில் தந்தையிடம் மகன் ஆசையாய் கேட்ட சைக்கிள்! தந்தையின் அசத்தல்! வைரலாகும் வீடியோ!
A class 8 student from Lakhoval village in Punjab's Ludhiana district made a bicycle that looks like a scooter
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள லாகோவல் கிராமத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹர்மஞ்சோ என்ற சிறுவன் கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின் போது முன்பக்கத்தில் இருந்து ஸ்கூட்டர் போல தோற்றமளிக்கும் ஒரு சைக்கிளை உருவாக்கி உள்ளார்.
அவர்கள் ஒரு பழைய ஸ்கூட்டரின் பகுதிகளைப் பயன்படுத்தி, அவற்றை தங்க நிறத்தில் வரைந்து, மிதிவண்டியில் பொறுத்தியுள்ளனர். அவர்கள் தயாரித்த சைக்கிளை முன்பக்கத்தில் இருந்து பார்த்தால், அது அச்சு அசல் ஒரு அழகான ஸ்கூட்டர் போலவே இருக்கும், மேலும் இது ஒரு சாதாரண சைக்கிளை போல மிதித்து செல்கிறான் அந்த சிறுவன்.
இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில், கோரரோனா ஊரடங்கால் எனது தந்தையால் எனக்கு புதிய சைக்கிள் வாங்கி கொடுக்க இயலவில்லை. எனவே இந்த ஊரடங்கு சமயத்தில் இந்த சைக்கிளை நாங்கள் உருவாக்கினோம் என தெரிவித்துள்ளார் அந்த சிறுவன். அந்த சிறுவன் அவர்கள் உருவாக்கிய சைக்கிளை ஓட்டிச்செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.