நண்டு எவ்வுளவு வேகமா நீந்தி செல்கிறது என பாருங்களேன்.. வைரலாகும் அசத்தல் வீடியோ.!
நண்டு எவ்வுளவு வேகமா நீந்தி செல்கிறது என பாருங்களேன்.. வைரலாகும் அசத்தல் வீடியோ.!
இயற்கையாக கடலில் வாழும் உயிரினங்கள் நீரில் நீந்தும் தன்மை கொண்டவை. விலங்குகளை பொறுத்த வரையில் அவைக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படவில்லை என்றாலும், பெரும்பாலும் நீரில் விழுந்தால் அவை கரை சேர்ந்துவிடும். சில வகை உயிரினங்கள் நீரிலும் - நிலத்திலும் வாழும் தன்மை கொண்டவை.
பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினங்கள் நீந்தும் என்பது உலகறிந்த விஷயம். ஆனால், அவைகளில் நண்டுகள் நீச்சல் அடிப்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம்., அறிந்திருந்தாலும் அதனை காண வாய்ப்புகள் இருந்திருக்காது. இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவில், நண்டு கடல் நீரில் நீச்சல் அடித்து பயணிப்பது தொடர்பான வீடியோ இடம்பெற்றுள்ளது. வீடியோ குறித்து தகவல் தெரிவித்துள்ள ஐ.எப்.எஸ் அதிகாரி, ஒரு நண்டு எவ்வளவு வேகமாக நீந்துகிறது என்பதை பாருங்கள். நண்டின் துடுப்பு வடிவ கால்கள் நிமிடத்திற்கு 20 முதல் 40 சுழற்சிகள் முறையில் சுழன்று நீருக்குள் நண்டு நீந்த உதவி செய்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.