துணிகர சம்பவம்.. Youtube மூலம் குழந்தை பெற்றெடுத்த சிறுமி.. பெற்றக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்ற கொடூரம்..!
துணிகர சம்பவம்.. Youtube மூலம் குழந்தை பெற்றெடுத்த சிறுமி.. பெற்றக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்ற கொடூரம்..!
மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் வசித்து வரும் சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வருகிறார். அவர் தனது படிப்பில் கவனத்தை செலுத்தாமல் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இதனால் சிறுமிக்கு இணையத்தில் தாக்கூர் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது அவர்கள் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் அந்த சிறுமி கருத்தரித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று கருவை கலைக்க முயன்றால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் இருந்த சிறுமி செய்வதறியாது இருந்துள்ளார்.
இதனையடுத்து நாளாக நாளாக சிறுமியின் வயிறு பெரிதாக உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த தாய் அவரிடம் கேட்கவே அவர் பொய் சொல்லி சமாளித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி youtube மூலம் பிரசவம் பார்ப்பது எப்படி என்ற வீடியோக்களை அதிகமாக பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமி youtube பார்த்து தானாகவே பிரசவம் பார்த்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் அங்கிருந்த பெல்டால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து குழந்தையின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
இதனையடுத்து வேலைக்கு வெளியே சென்ற தாய் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டில் இருந்த இரத்த கறைகளை கண்டு அதிர்ச்சி அடைந்து சிறுமியிடம் விசாரிக்கவே பயந்து போன சிறுமி நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சிறுமியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.