PAN நம்பர் கேட்டு SBI அக்கவுண்ட் பிளாக் என குறுஞ்செய்தி வருகிறதா மக்களே?.. நூதன மோசடி அம்பலம்.. எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்.!
PAN நம்பர் கேட்டு SBI அக்கவுண்ட் பிளாக் என குறுஞ்செய்தி வருகிறதா மக்களே?.. நூதன மோசடி அம்பலம்.. எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்.!
யோனா அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும் என பரப்பப்படும் பதிவு போலியானது, அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் அல்லது பேன் நம்பரை பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே போலியான அறிவிப்பு குறுஞ்செய்திகள், ஆசையை தூண்டும் தகவல்கள் என நூதன மோசடி தொடர்ந்து வருகிறது.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோரை காவல் துறையினர் கைது செய்தாலும், குற்றவாளிகள் சமூகத்தில் அதிகளவு நிறைந்துவிட்டதால் காவல் துறையினராலும் குற்றங்களை கட்டுப்படுத்த பெரும் சிரமம் ஏற்படுகிறது.
சைபர் குற்றங்களை தடுக்க போலியான அறிவிப்புகள் தொடர்பான விஷயங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஸ்டேட் பேங்க் வங்கி பெயரில் குறுஞ்செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
அந்த குறுஞ்செய்தியை உங்களின் வங்கி கணக்கை பிளாக் செய்திருப்பதாகவும், அதனை சரி செய்ய பேன் கார்டு எண்ணை பதிவேற்றம் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நூதன மோசடி என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இவ்வாறான மோசடிகளை நம்ப வேண்டாம் என்றும், மேற்படி யாருக்கேனும் குறுஞ்செய்தி பெறப்பட்டால் report.phishing@sbi.co.in என்ற மின்னஞ்சலுக்கு விரைந்து தகவலை அனுப்ப வேண்டும்.
அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் சென்று ஆன்லைன் வாயிலாக புகார் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.