பெற்றோர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. பெண் குழந்தைகளுக்கான 1லட்சம் நிதி உதவி திட்டம்!!
பெற்றோர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. பெண் குழந்தைகளுக்கான 1லட்சம் நிதி உதவி திட்டம்!!
பெண் குழந்தைகளின் நலன் கருதி ஒவ்வொரு மாநில அரசும் வெவ்வேறு திட்டங்களை அறிமுகபடுத்தி வருகின்றது. இவை அனைத்தும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே அரசால் உருவாக்கப்படுகின்றது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான "லேக் லடுக்கி யோஜ்நா" என்ற புதிய பாதுகாப்பு நிதி உதவி திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 1லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் தரப்படும் 1லட்சம் ரூபாய் 5 தவனைகளாக பிரித்து வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் பெண் குழந்தை பிறந்ததும் ரூ.5000 வழங்கப்படும். இதனைதொடர்ந்து அந்த குழந்தையை 1ம் வகுப்பில் சேர்கும் போது ரூ.6000, அதன்பின் 6ம் வகுப்பு செல்லும்போது ரூ.7000, 9ம் வகுப்பு செல்லும்போது ரூ.8000 வழங்கப்படும்.
இதை தொடர்ந்து அந்த பெண் குழந்தை 18 வயதை பூர்த்தி செய்யும் போது ரூ.75000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.