#Video: 90-கிட்சின் வயிற்றில் பயர் விடவைத்த காதல் ஜோடி.. கட்டிலில் அணைப்பது போல, நடுரோட்டில் ஜல்சா ட்ரிப்.!
#Video: 90-கிட்சின் வயிற்றில் பயர் விடவைத்த காதல் ஜோடி.. கட்டிலில் அணைப்பது போல, நடுரோட்டில் ஜல்சா ட்ரிப்.!
நடுரோட்டில் காதல் ஜோடி பின்னிப்பிணைந்து வித்தியாசமான முறையில் பயணம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பல கருத்துக்கள் குவிந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட்டை பகுதியில் காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளது. இந்த காதல் ஜோடி சற்று வித்தியாசமான முறையில் பயணம் செய்தது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இயல்பாக காதல் ஜோடி காதலன் வாகனத்தை இயக்க, அவருக்கு பின்னால் காதலனை கட்டியணைத்தவாறு பயணம் செய்யும். காதலி வாகனத்தை இயக்கினால் காதலன் காதலியை கட்டியணைத்து செல்வார். இந்த நிலையில், இந்த காதல் ஜோடியானது காதலி பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்து காதலனை இறுக கட்டியணைத்து பயணம் செய்துள்ளது.
காதல் ஜோடியின் இந்த உல்லாச பயணத்தை வாகன ஒட்டி வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்யவே, அது வைரலாகி இருக்கிறது. மேலும், விடியோவை பார்க்கும் சிலர் காதலிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அதனால் அவர் கீழே விழாதவாறு காதலன் அழைத்து செல்ல அப்படி அமர வைத்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், அவர்களின் செய்கைகளை பார்த்தால் உடல்நலம் என தெரியவில்லை என்றும் பதில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.