16 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைத்து... மகாராஷ்டிரா மாநில இளைஞர் கைது.!
16 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைத்து சித்திரவதை... மகாராஷ்டிரா மாநில இளைஞர் கைது.!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பூனே சார்ந்த 16 வயது சிறுமி தேர்வு எழுதுவதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜாவித் சேக் என்ற 22 வயது இளைஞர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். மேலும் சிகரெட்டால் சூடு வைப்பது அடிப்பது போன்ற கொடுமைகளையும் செய்திருக்கிறார். மேலும் பல்வேறு சித்திரவதைகளையும் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரது குடும்பத்துடன் சிறுமியை சேர்த்து வைத்தனர். மேலும் சிறுமியை நான்கு ஆண்டுகளாக கொடுமை செய்து வந்த ஜாவித் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.