தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டாக்டர் கனவுடன் சென்ற மகன்...‌ சீன மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டை மருத்துவ மாணவர் பலி.!

டாக்டர் கனவுடன் சென்ற மகன்...‌ சீன மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டை மருத்துவ மாணவர் பலி.!

a-medical-student-from-pudhukottai-died-in-china-medica Advertisement

சீனாவில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டையைச் சார்ந்த மாணவர்  பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம்  ஆறாவது தெருவில் வசித்து வருகின்றனர். மாணிக்கம் மற்றும் விசாலாட்சி தம்பதி. இவர்களது மகன் வைத்தியநாதன். இதில் விசாலாட்சி புதுக்கோட்டையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகனை மருத்துவம் படிப்பதற்காக  சீனாவில் உள்ள  ஜின்ஜோ மாகாணத்தில்  இயங்கி வரும் ஜின்ஜோ  மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்த்திருந்தார்.

India

அந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர் வைத்தியநாதன் தற்போது நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் குடிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது நீச்சல் குளத்தில் இவர் குளித்துக் கொண்டிருந்த நிலையில்  குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றி சுத்திகரிக்கும் இயந்திரம் இயக்கப்பட்டு இருக்கிறது.எதிர்பாராத விதமாக அந்த இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் வைத்தியநாதன்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்செய்தியைக் கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சீனாவில் மரணம் அடைந்த மாணவரின் உடல்  இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #china #medicalstudent #swimmingpoolaccident #studentdeath
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story