32 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்த அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மகன்.. இதுவல்லவோ பாசம்..!
32 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்த அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மகன்.. இதுவல்லவோ பாசம்..!
தனது அன்பு தாயின் ஆசையை மகன் நிறைவேற்றியது பாராட்டுகளை குவித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டம், முந்த்ரா பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரின் தாயார் ரசியா (வயது 89). ரசியா கடந்த 32 ஆண்டுகளாக உடலநலக்குறைவால் படுத்த படுக்கையாகவுள்ளார்.
அவருக்கு தனது வாழ்நாளில் ஒரு முறையாவது தாஜ்மஹாலை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தனது ஆசையை பெண்மணி மகன் முகமதுவிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனது தாயின் ஆசையை நிறைவேற்ற மகன் முகமது, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தாயை சக்கர படுக்கை உதவியுடன் தாஜ்மஹாலுக்கு அழைத்து வந்துள்ளார்.
தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்த தாய், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகின்றன.
பெற்றோரை வயதான பின்னர் பல குழந்தைகள் பராமரிக்க சிரமம் என முதியோர் இல்லத்தில் சேர்த்தும், வீட்டில் திட்டி தீர்த்தும் வரும் இக்காலத்தில் 32 ஆண்டுகளாக குழந்தை போல தாயை பார்த்து, வயதாகிய பின்னர் அவரின் ஆசையை நிறைவேற்றிய மகனின் செயல் பாராட்டுதலுக்கு தகுந்ததே.