×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனிதர்களின் உயிருடன் விளையாடும் மாடுகள்.! பயங்கரமான திருவிழா.. இந்த ஊரிலா.?!

மனிதர்களின் உயிருடன் விளையாடும் மாடுகள்.! பயங்கரமான திருவிழா.. இந்த ஊரிலா.?!

Advertisement

கடந்த 12ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தது. இந்த சூழ்நிலையில் தான், நேற்றுமுன்தினம் மத்திய பிரதேச மாநிலத்தில், மனிதர்கள் மீது மாடுகளை ஓட விடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதத்தில் கொண்டாடப்பட்டது. 5 நாள் திருவிழாவாக பல்வேறு மத சடங்குகளோடு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் கொண்டாடப்படுகின்றது. அந்த விதத்தில், தீபாவளிக்கு மறுநாளான நேற்று முன்தினம் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து, ஒரு வித்தியாசமான முறையில் அந்த பகுதி மக்கள் மத சடங்குகளை செய்துள்ளனர்.

உஜ்ஜைனி மாவட்டத்தில் இருக்கின்ற பட் நகர் தெஹ்சில் பினவாட் என்ற கிராமத்தில் இந்த திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் மாடுகளை அலங்கரித்து, அதன் பின் சில நபர்கள் மாடுகளின் முன்பாக படுத்து விடுகிறார்கள்.

 அப்போது கீழே படுத்திருந்த நபர்கள் மீது அந்த அலங்கரிக்கப்பட்ட மாடுகள், கன்றுகுட்டிகள் போன்றவை ஏறி ஓடுகின்றன. மாடுகளை தங்கள் மீது ஏறி ஓட விடுவதன் மூலமாக, தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் என்று அந்த பகுதி மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mathya Predesh #Diwali #Virul Video #post diwali Ritual #Diwali Festival
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story