ஸ்வீடனில் இருந்து இன்ஸ்டா நண்பரை பார்க்க இந்தியா வந்த சிறுமி.. நட்பின் நெகிழ்ச்சி செயல்.!
ஸ்வீடனில் இருந்து இன்ஸ்டா நண்பரை பார்க்க இந்தியா வந்த சிறுமி.. நட்பின் நெகிழ்ச்சி செயல்.!
வெளிநாட்டை சார்ந்த 16 வயது சிறுமி, தனது 19 வயது நண்பரை பார்க்க இந்தியாவிற்கு வந்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமி சமீபத்தில் மாயமான நிலையில், சிறுமியின் தந்தை அந்நாட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், கடந்த மாதம் 27 ஆம் தேதியில் இருந்து சிறுமியை தேடி வந்துள்ளனர். விசாரணையில், சிறுமி இந்தியாவில் உள்ள மும்பையை சார்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டா வழியாக பேசி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாயமான சிறுமி குறித்து சர்வதேச காவல் துறையினர், Yellow Notice பிறப்பித்து இருந்தனர். இந்த தகவல் மும்பை காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. மும்பை காவல் துறையினர் சிறுமியுடன் தொடர்பில் இருந்த வாலிபர் குறித்த தகவலை தொழில்நுட்ப உதவியுடன் பெற்றுள்ளனர்.
இன்ஸ்டாவில் சிறுமிக்கு அறிமுகமான நபர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்த நிலையில், சீத்தாகெம்ப் பகுதியில் இருந்த சிறுமியை காவல் துறையினர் மீட்டு, டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து பார்த்துக்கொண்டனர். சிறுமி மீட்கப்பட்ட விஷயம் ஸ்வீடன் நாட்டின் தூதரகம் மூலமாக, டெல்லி சர்வதேச காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சிறுமியின் தந்தை மற்றும் குடும்பத்தினர் மும்பைக்கு விரைந்து வரவே, சட்டவிதிமுறைகள் அனைத்தும் முடிந்ததும் காவல் துறையினர் சிறுமியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். குடும்பத்தினர் மகளை கண்டதும் கட்டியணைத்து, பாசத்தை வெளிப்படுத்தி தங்களின் நாட்டிற்கு அழைத்து சென்றனர்.
மேலும், சிறுமி சுற்றுலா விசாவில் மும்பைக்கு வந்தது தெரியவந்துள்ள நிலையில், சிறுமியின் தரப்பில் இன்ஸ்டா நண்பருக்கு எதிராக புகார் அளிக்கப்படவில்லை என்பதால் மேற்படி வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. நண்பனை காண ஸ்வீடன் நாட்டு சிறுமி இந்தியா வந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.