காதலியின் வீட்டில் பிணமாக தொங்கிய வாலிபர்... கொலையா? தற்கொலையா?.. காவல்துறை விசாரணை.!
காதலியின் வீட்டில் பிணமாக தொங்கிய வாலிபர்... கொலையா? தற்கொலையா?.. காவல்துறை விசாரணை.!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் வீட்டில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் இக்பால் இவரும் அதே பகுதியைச் சார்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இது அந்தப் பெண்ணின் தந்தைக்கு தெரியவே அவர் ஊர் பஞ்சாயத்தை கொண்டிருக்கிறார். இந்நிலையில் காதலன் மற்றும் காதலி இருவரும் தனியாக காதலியின் வீட்டில் சந்தித்து பேச முடிவு எடுத்து இருக்கின்றனர்.
ஆனால் இதனை தெரிந்து கொண்ட காதலியின் தந்தை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இக்பால் அவரது காதலியின் வீட்டில் தூக்கில் நிலையில் தூங்கி நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இக்பாலின் பெற்றோர் காவல் துறைக்கு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இக்பாலின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.