×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பலதரப்பட்ட தனி நபர்களின் தகவல்களை திருடி விற்பனை செய்த வாலிபர்... அதிர்ச்சி தகவல்..!!

பலதரப்பட்ட தனி நபர்களின் தகவல்களை திருடி விற்பனை செய்த வாலிபர்... அதிர்ச்சி தகவல்..!!

Advertisement

66.9 கோடி நபர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த விநாயக் பகத்வாஜ் என்பவர் நாடு முழுவதும் 24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த 66 கோடியே 90 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்ததாக கூறி தெலங்கானா மாநில சைபராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசு ஊழியர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பான் கார்டு வைத்துள்ளோர், மூத்த குடிமக்கள், 9,10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், தனி நபர்களின் செல்போன் எண்கள்,டெல்லி மின்வாரியத்துறை வாடிக்கையாளர்கள், டி-மார்ட் கணக்கு வைத்துள்ளோர், நீட் மாணவர்கள், பெரும் பணக்காரர்கள், இன்சூரன்ஸ் கணக்கு வைத்துள்ளோர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கணக்கு வைத்துள்ளோரின் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளார்.

அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் இயங்கிவரும் இன்ஸ்பயர்வெப்ஸ் என்னும் இணையதளம் மூலம் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடியுள்ளார். பின்னர் அதை கிளவுட் டிரைவ் லிங்க் மூலம் பல நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். 

காவல்துறையினர் விநாயக் பகத்வாஜை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் இரண்டு லேப்டாப்கள், மேலும் தனிப்பட்ட தரவுகள் அடங்கிய கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து விநாயக்கிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Ariana #Youth #Stole and sold the Information
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story