நள்ளிரவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம்...!! இரண்டு பேர் பலி, பலர் படுகாயம்..!!
நள்ளிரவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம்...!! இரண்டு பேர் பலி, பலர் படுகாயம்..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் அருகே இருந்த மூன்று மாடி கட்டிடம் நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் அஞ்சலி, துர்கா பிரசாத் என்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்த வண்ணம் உள்ளன.
மேலும் காவல்துறையினர் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.