உயிருக்கு போராடிய மனைவியை இடுப்பில் சுமந்த கணவர்; அவசர ஊர்தி கிடைக்காததால் சோகம்.!
உயிருக்கு போராடிய மனைவியை இடுப்பில் சுமந்து சென்ற கணவர்; அவசர ஊர்தி கிடைக்காததால் சோகம்.!
இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும், அந்நகரில் பிரதானமான வளர்ச்சிகள் என்பது மேலோங்கி இருந்தாலும், பிற வட இந்திய மாநிலங்களின் வளர்ச்சிகள் என்பது தற்போதுதான் படிப்படியாக தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை காட்டிலும், பல்வேறு விஷயங்களில் குளறுபடிகள், மோசமான நிர்வாக நடவடிக்கைகள் என பல விஷயங்கள் அங்கு எதிர்மறை விமர்சனத்துடன் இருக்கின்றன.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்ததால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; பதறவைக்கும் காட்சிகள்.!
அதற்கு ஒரு சாட்சியாக சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்ட கோவிலும், அதனால் எழுந்த சர்ச்சையும், சிறுவன் ஒருவன் அளித்த பேட்டியும் உதாரணமாக அமைந்தது.
வளர்ச்சித்திட்டங்கள் கிராமங்களில் வேகம் இல்லை
இதனிடையே, வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோ ஒன்றில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை கணவர் இடுப்பில் சுமந்து வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
இந்த வீடியோ எங்கு ? எப்போது ? பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த விபரம் சேகரிக்கப்படுகிறது. இதுகுறித்த வீடியோவில், கணவர் ஒருவர் தனது உடல்நலம் குன்றிய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
அவசர ஊர்தி இல்லை
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெண்ணை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தவே, அவசர ஊர்தியை உதவிக்கு கேட்டுள்ளனர்.
ஆனால், அவசர ஊர்திக்கு பணம் கேட்டதாகவும், கையில் இருந்த கொஞ்ச பணத்தை கொடுக்க முன்வந்தாலும், அவசர ஊர்தி இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தாமதம் ஏற்பட்டு பெண்ணின் உடல்நிலை மோசமாக தொடங்கி இருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட கணவர், மனமுடைந்த நிலையிலும் தனது மனைவியை குழந்தை போல இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து வீடியோ எடுத்து, மனைவியை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பெண்ணின் உடல்நிலை மோசமாகி தவித்த நிலையில், அவர் சுவாசிக்க சிரமப்பட்டு துடித்த காட்சிகள் காண்போரை கலங்க வைக்கிறது.
இதையும் படிங்க: இறந்த பின் திடீரென உயிர்த்தெழுந்த நபர்; ஆம்புலன்சில் ஆடிப்போன உறவினர்கள்.!